கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; அனர்த்தத்தில் உயிர் தப்பிய 150 பேர்

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; அனர்த்தத்தில் உயிர் தப்பிய 150 பேர்

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; அனர்த்தத்தில் உயிர் தப்பிய 150 பேர்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 10:05 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் புதையுண்ட குடியிருப்புகளில் சுமார் 332 பேர் வரை வாழ்ந்து வந்தததாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

அங்கிருந்த 75 சிறுவர்கள் காலை பாடசாலைக்கு சென்றிருந்ததாலும், மேலும் 75 வயதுவந்தோர் கொழுந்து பறிப்பதற்காக சென்றிருந்தமையாலும் அனர்த்தத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையின் காரணமாக மீரியபெத்த பகுதியில் இன்று காலை 7.45 அளவில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக சுமார் 500 இராணுவ வீரர்கள் இன்று ஈடுபடுத்தப்பட்டருந்தனர்.

மீரியபெத்த பகுதியில் 80ற்கும் அதிகமான வீடுகள் மண்சரிவில் புதையுண்டள்ளமை பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிரதேசத்தில் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் தொடர்ந்து நிலவியுள்ளதால், மக்கள் அந்த பகுதிக்குச் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்