காணாமல்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் – கமலேஷ் சர்மா

காணாமல்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் – கமலேஷ் சர்மா

காணாமல்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் – கமலேஷ் சர்மா

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 8:43 pm

காணாமல்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தெரிவிக்கின்றார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இந்த ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இதன்போது விளக்கமளித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, வெற்றி கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நிரந்தர நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு தாம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் இந்த ஊடக சந்திப்பில் கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளும் வரை அந்த வடுக்களை அழிக்க முடியாது என்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்