ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரநிதிகள் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரநிதிகள் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரநிதிகள் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 9:24 am

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரதானி ஜோன் கோல் லெபொட் உள்ளிட்ட பிரநிதிகள் சிலர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மூன்று நாட்கள் அவர்கள் நாட்டில் தங்கியிருப்பார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் இலங்கை செயற்படும் விதம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பிலும் இவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

சர்வதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்