எகிப்தில் இராணுவம் மீதான தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்

எகிப்தில் இராணுவம் மீதான தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்

எகிப்தில் இராணுவம் மீதான தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 9:10 am

எகிப்தில் இராணுவ அதிகாரிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 31 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சினால் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் 31 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலானது தீவிரவாதத்தின் பாரதூரத்தையும், மனிதாபிமானமற்ற தன்மையையும் சர்வதேச சமூகத்திற்கு பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கமும், மக்களும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்கள செய்தியில் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்