யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை முடக்குவதற்கு அரசு முயற்சிப்பதாக த.தே.கூ. குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை முடக்குவதற்கு அரசு முயற்சிப்பதாக த.தே.கூ. குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2014 | 7:33 pm

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை முடக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பி.கஜதீபன் இந்த விடயத்தினைக் கூறினார்.

வட மாகாண சபை உறுப்பினர் பி.கஜதீபன் தெரிவித்த கருத்து:-

[quote]இந்த மண்ணுக்க ஜனாதிபதி வந்ததன் பின்னர் உடனடியாகவே வடக்கு மாகாணத்திற்கான நுழைவாயில் ஒமந்தைச் சாவடி பூட்டப்பட்டது. இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றிருக்கின்ற அந்த மக்கள் இந்த மண்ணுக்கு வருவது தடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த யுத்தம் நிறைவடைந்ததற்குப் பிறகு இந்த மண்ணுக்கு அவர்கள் வருகின்ற போது, அந்த சோதனைச் சாவடியினூடாக அவர்கள் வருவதற்கு பாதுகாப்பு அமைச்சினுடைய அனுமதியைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தெற்கிலிருந்து வடக்கிற்கான பயணம் இலகுபடுத்தப்பட்டிருக்கினறது. அந்தப் புகையிதத்தினூடாக வரக்கூடிய பயணிகள் அதனால் வர முடியாதவர்களாக அவர்கள் அங்கே ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப் போல இப்போது நாங்கள் அறிகிறோம் இந்தப் புகையிரதத்திலே சோதனைகள் இராணுவத்தினரால் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலைமையும் நாங்கள் அணைமைக்காலத்தில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு இந்த சுற்றுலாத்துறையையஞம முடக்குவதற்கான செயற்பாடையும் இவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது, அந்த சுற்றுலாத்துறையோடு தொடர்புடைய ஏனைய பிரிவினர் பல தொழிலாளர்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இருக்கின்றது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்