சம்மட்டி எறிதல் போட்டியில் ஏ.ஏ மதுவன்தி தேசிய சாதனை(video)

சம்மட்டி எறிதல் போட்டியில் ஏ.ஏ மதுவன்தி தேசிய சாதனை(video)

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2014 | 6:55 pm

40 ஆவது தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் சம்மட்டி எறிதல் போட்டியின் மகளிர் பிரிவில் ஊவா மாகாணத்தின் ஏ.ஏ மதுவன்தி தேசிய சாதனை படைத்தார்

அநுராதபுரத்திலுள்ள வடமேல் மாகாண விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்ற போட்டியில் அவர் 42  தசம் ஏழு நான்கு மீற்றர் தூரத்திற்கு சம்மட்டியை  எறிந்து  தேசிய சாதனையை நிலை நாட்டினார்

தேசிய விளையாட்டு விழாவில் சம்மட்டி எறிதல் போட்டி இம்முறை முதல் தடவையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்களால் வெற்றி கொண்டது

பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 438 ஓட்டங்கள் என்ற வெற்றியலக்கை நோக்கி இரண்டாவது இனிங்ஸில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 216 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது

பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய யாசிர் ஷா 7 விக்கட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் போட்டியின் நாயகனாக தெரிவானார்
இதன் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 1க்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்