கிழக்கில் மீன்கள் இறந்தமை தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்தது நாரா

கிழக்கில் மீன்கள் இறந்தமை தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்தது நாரா

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2014 | 7:47 pm

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மீன்கள் இறந்தமை தொடர்பில் நாரா நிறுவனத்தினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்ககப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருவப் பெயர்ச்சியினால் கடலில் நீரோட்டத் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம், நீரில் ஒட்சிசனின் அளவு குறைவடைந்தமை மீன்களும், இறால்களும் இறப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நிறுவனத்தின் சமுத்திரவியல் பிரிவின் தலைமை ஆய்வாளர் கே அருளானந்தன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்குவதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, திருகோணமலை, மூதூர் களப்புகளில் மீன்களுடன், பெரும் எண்ணிக்கையிலான இறால்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பெருமளவான மீன்கள் கரையொதுங்குவதை அடுத்து, நேற்றுமுதல் அந்த பகுதியில் மீன்பிடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்