வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 6:46 pm

வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.

விவாதத்தை ஆரம்பித்துவைத்து கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஆயினும், இம்முறை வரவு – செலவுத் திட்டம் தெளிவான சிந்தனையுடன் தயாரிக்கப்பட்ட ஒன்றென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

இம்முறை வரவு – செலவுத் திட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றெனவும், ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறினார்.

அனைத்து தரப்பினருக்கும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான விடயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் சபை முதல்வர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை, அவசர சட்டமூலமாக கொண்டுவருவதற்கு என்ன தேவை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வினவினார்.

அதற்கு ஏ.எச்.எம் அஸ்வர், மனூஷ நாணயக்கார, லலித் திஸாநாயக்க ஆகியோர் கருத்து வெளியிட்டதுடன், வீண் பேச்சுக்களுக்கு அமைய செயற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்