மூதூர் களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக தகவல்

மூதூர் களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக தகவல்

மூதூர் களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 1:14 pm

திருகோணமலை மூதூரிலுள்ள களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சம்பூர் இறால் பாலம் அருகில் பெருமளவான மீன்கள் கரையொதுங்குவதால் ஆற்றை நம்பி மீன்பிடியில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் எஸ்.கிருஷ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார்.

களப்பில் நேற்று காலை முதல் மீன்கள் கரையொதுங்குவதாகவும், மூதூர் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் கூறுகின்றார்.

சம்பூர் இறால் பாலத்திற்கு அருகில் மீன்கள் கரையொதுங்கியமை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆய்வுகள் நிறைவடையும் வரை மூதூர் பிரதேச களப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் உபாலி சமரதுங்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்