மூதூர் களப்புகளில் அல்கா பெருக்கம் மீன்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்

மூதூர் களப்புகளில் அல்கா பெருக்கம் மீன்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்

மூதூர் களப்புகளில் அல்கா பெருக்கம் மீன்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 6:59 pm

திருகோணமலை, மூதூர் களப்புகளில் அல்கா பெருக்கம் மீன்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இறால் பாலம் அருகில் பெருமளவான மீன்கள் கரையொதுங்கியதை அடுத்து, மேற்கொண்ட ஆய்வுகளின் இறுதி முடிவு நாரா நிறுவனத்தால் இதுவரை வழங்கப்படவில்லை என திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் உபாலி சமரதுங்க நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் அல்கா பெருக்கத்தால் மீன்கள் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், நாரா நிறுவனம் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறால் பாலத்திற்கு அருகில் மீன்கள் கரையொதுங்கியமை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று தொடர்ந்நதும் செயற்படுவதாக கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆய்வுகள் நிறைவடையும் வரை மூதூர் பிரதேச களப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளை தற்காலிகமாக தடைசெய்யுமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் உபாலி சமரதுங்க சுட்டிக்காட்டினார்.

களப்புகளில் மீன்கள் இறந்தநிலையில் கரையொதுங்குவதால், ஆற்றை நம்பி மீன்பிடியில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் எஸ்.கிருஷ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்