நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம்

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம்

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 7:16 pm

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிறி தெரிவிக்கின்றார்.

குறித்த வீதியின் கொத்மலை மற்றும் புஸ்ஸல்லாவ பகுதிகளில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல இடங்களில் சிறியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இரவு வேளையில் கடும்மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால், சாரதிகளும், பொது மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்கின்றது.

அதிக மழையினால் எல்ல-வெல்லவாய வீதியை பயன்படுத்துவோரை அவதானத்துடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் டீ.எம்.எல் உதயகுமார குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கந்தப்பளை இலக்கம் 1 பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வவுனியால் மழையால் சிறு குளங்கள் பெருக்கெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் மழை பெய்வதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்