சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 10:59 am

பொலிஸாருக்கு எதிராக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸாரினால் தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க குறிப்பிடுகின்றார்.

நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார் செயற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அதுகுறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்