கிழக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆறாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

கிழக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆறாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

கிழக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆறாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 10:30 am

கிழக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 ஆம் திகதி முதல் மாகாணத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பொது சுகாதார பரிசோதகரின் இடமாற்றத்தை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜீ. சரவணபவன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இந்த பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. மன்சூரிடம் வினவியபோது, குறிப்பிட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்