கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 9:41 am

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்துவைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் செயலகம் இயங்கிவந்த கட்டட
தொகுதியில், இந்த தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், வட மாகாண தேர்தல் ஆணையாளர் நமீல், மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்