கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 5:44 pm

களுத்துறை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்ஜினொன்று தடம்புரண்டதில் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்ஜின் இன்று பிற்பகல் 1.30 அளவில் தடம்புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பிற்பகல் 2.10க்கு மாத்தறை நோக்கிப் பயணிக்கவிருந்த காலி குமாரி ரயில் சேவை மற்றும் 3.40க்கு புறப்படவிருந்த ருகுணு குமாரி ரயில் சேவை ஆகிய இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

கெதழும்பு- பாணந்துறை இடையேயும், மாத்தறை-அளுத்கம இடையிலும் ரயில்சேவைகள் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்