கமலேஷ் ஷர்மா இன்று இலங்கை விஜயம்

கமலேஷ் ஷர்மா இன்று இலங்கை விஜயம்

கமலேஷ் ஷர்மா இன்று இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 1:37 pm

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே, கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை பொதுநலவாய செயலாளர் நாயகம், சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கமலேஷ் ஷர்மா யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலேஷ் ஷர்மா எதிர்வரும் 29 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்  எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்