அக்கரபத்தனையில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

அக்கரபத்தனையில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

அக்கரபத்தனையில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 1:23 pm

அக்கரபத்தனை, ஊட்டுவில் பிரேமோர் தோட்டத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவு 11.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஊட்டுவில் பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்