விஜய்யின் விளம்பரப் பதாகைக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து ரசிகர் பலி

விஜய்யின் விளம்பரப் பதாகைக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து ரசிகர் பலி

விஜய்யின் விளம்பரப் பதாகைக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து ரசிகர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 11:23 am

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கத்தி படம் பார்த்துவிட்டு குதூகலத்தில் வெளியே வந்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மிகப்பெரிய காட்சிப் பதாகைக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து பலியானார்.

கத்தி படம் தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. கேரளாவில் மட்டும் சுமார் 200 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

கேரளாவில் ஓடும் ரயில்களில் முதல்முறையாக தமிழ் படமான கத்தியின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்சேரியைச் சேர்ந்த உன்னி என்பவர் புதன்கிழமை கத்தி படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்