புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியமைக்கு கையெழுத்துகள் வௌ்ளவத்தையில் சேகரிப்பு

புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியமைக்கு கையெழுத்துகள் வௌ்ளவத்தையில் சேகரிப்பு

புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியமைக்கு கையெழுத்துகள் வௌ்ளவத்தையில் சேகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 7:40 pm

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்களின் கையெழுத்துகளை சேகரிக்கும் திட்டமொன்று இன்று வௌ்ளவத்தையில் ஆரம்பமானது.

கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டம் அமைச்சர் சி.பி ரத்நாயக்க தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

இந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சி.பி ரத்நாயக்க தெரிவித்த கருத்து:-

“மீட்டெடுத்த இந்த சுதந்திரத்தையும், எரிந்து கொண்டிருந்த ​தேசத்திலிருந்து காப்பாற்றப்பட்ட தாய் மண்ணையும் மீண்டும் காட்டிக்கொடுக்க முடியாது என்பதை சர்வதேசத்திற்கு கூறுவதற்காக இந்த மக்கள் செயற்படுகின்றனர். இந்த தாய் மண்ணுக்கு சுதந்திரம் கிடைத்து, அதனை அனுபவிக்கின்ற இநத சநதர்ப்பத்தில் எமது பிள்ளைகளுக்காக கட்டியெழுப்பபடுகின்ற இந்த நாட்டை, ஆரோக்கியமான வளமான சந்ததியினரை உருவாக்குகின்ற இந்த நாட்டை சீரழிக்க  எவருக்கும் இடமளிக்க முடியாது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்