புறக்கோட்டையில் கட்டடத் தொகுதியொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

புறக்கோட்டையில் கட்டடத் தொகுதியொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

புறக்கோட்டையில் கட்டடத் தொகுதியொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 7:58 am

புறக்கோட்டை முதலாம் குறுக்கு வீதியிலுள்ள கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.

நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ, இன்று அதிகாலை அளவில் கட்டுப்பாட்டுக்குள் ​கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கட்டடத் தொகுதியிலுள்ள துணிக் கடையிலும், இலத்திரனியல் உபகரணங்கள் கடையிலும் இந்தத் தீ பரவியுள்ளது.

எவ்வாறாயினும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை, புறக்கோட்டை கேசர் வீதியிலுள்ள துணிக் கடையொன்றின் களஞ்சியசாலையில் பரவிய தீ, நேற்றிரவு 10 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீயினால் களஞ்சியசாலைக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்