பரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கையின் பதக்க வேட்டை தொடர்கிறது

பரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கையின் பதக்க வேட்டை தொடர்கிறது

பரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கையின் பதக்க வேட்டை தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 8:43 pm

பரா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரவீராங்கனைகள் அதிக பட்ச ஆற்றல்
800 மீற்றர் ரி 46 பிரிவில் இலங்கைக்கு இன்று  வௌ்ளிப்பதக்கம்.

தாய் நாட்டை பெருமைபடுத்தும் வகையில் இரண்டாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில்
இலங்கை 11 பதக்கங்களை சுவீகரித்துள்ளது.

போட்டிகளின் ஐந்தாம் நாளான இன்று துமீர மதுரங்க, பிரதீப் சஞ்சய ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.

தென் கொரியாவின் இன்ச்சோங் நகரில் நடைபெறும் இரண்டாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில்
இலங்கையிலிருந்து இம்முறை 52 வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர்.

பராலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரதீப் சஞ்சய இலங்கை அணியின் தலைவராக செயற்படுகிறார்.

விளையாட்டு விழாவில் 41 நாடுகள் பங்கேற்றுள்ளதுடன் 11 பதக்கங்களை வென்றுள்ள இலங்கை பதக்கப்பட்டியலில் 16 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

அவற்றில் ஒரு தங்கம், 6 வௌ்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்குகின்றன. இம்முறை அதிக பதக்கங்களை வெற்றிகொண்டவராக திகழும் அனில் பிரசன்ன தங்கப்பதக்கத்தை வென்றவராவார்.

ஆடவருக்கான 200 மீற்றர் டி 42 பிரிவில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

உபுல் இந்திக ச்சூலதாச, துமீர மதுரங்க, இந்துமதி கருணாதிலக ஆகியோர் மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கம்
வென்ற ஏனைய வீர, வீராங்கனைகளாவர்.

சக்கர இருக்கை டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் பிரிவில் தினேஷ் டி சில்வா வௌ்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

விளையாட்டு விழா நாளை முடிவுக்குவரவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்