கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
‘நொகியா’ பெயரைக் கைவிடுகிறது மைக்ரோ சொப்ட்

‘நொகியா’ பெயரைக் கைவிடுகிறது மைக்ரோ சொப்ட்

‘நொகியா’ பெயரைக் கைவிடுகிறது மைக்ரோ சொப்ட்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 4:40 pm

தங்களது லுமியா கைத்தொலைபேசிகளில் இருக்கும் நொகியா என்ற பெயரை நீக்க மைக்ரோ சொப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நொகியா பிரான்ஸின் பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. எனினும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்திடமிருந்து இது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நொகியாவை மைக்ரோ சொப்ட் வாங்கியது.  ஆனால் நொகியா என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

நொகியா தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நொகியா என்ற பெயரையும் அந்நிறுவன உரிமையாளர்களே தக்கவைத்துள்ளனர். அந்தப் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் மைக்ரோ சொப்டிடம் உள்ளது.

புதிதாக பதவியேற்றுள்ள மைக்ரோ சொப்டின் தலைமை அதிகாரி சத்யா நடெல்லா  மைக்ரோசொப்டின் தொலைபேசி தயாரிப்பை பெரியளவில் கட்டுப்படுத்தியுள்ளார். இதனால் சமீபத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 18,000 மைக்ரோ சொப்ட் ஊழியர்களில் 12,500 ஊழியர்கள் தொலைபேசி தயாரிப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்