ஜம்மு காஷ்மீருக்கு இந்திய பிரதமர் விஜயம்

ஜம்மு காஷ்மீருக்கு இந்திய பிரதமர் விஜயம்

ஜம்மு காஷ்மீருக்கு இந்திய பிரதமர் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 1:31 pm

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வரும் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தில் எல்லைப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களையும் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அண்மையில் காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கும் பிரதமர் விஜயம் செய்யவுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற இந்த அனர்தத்தில் 281 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்