சீரற்ற வானிலையால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 1:19 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையினால் மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பலத்த பெய்வதால் வீதிகளிலும், தாழ்நில பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை பெய்த மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும், குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

மலையகத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பலத்த மழையினால் காலி – இமதுவ பிரதேச செயலாளர் பிரிவின் சில பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர் மழையினால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், வல்பல வீதியில் மரமொன்று வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்