சட்ட மாஅதிபராக யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக்க சத்தியப்பிரமாணம்

சட்ட மாஅதிபராக யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக்க சத்தியப்பிரமாணம்

சட்ட மாஅதிபராக யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக்க சத்தியப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 9:09 pm

இலங்கையின் 28 ஆவது சட்ட மாஅதிபராக யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1979 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சேவையில் இணைந்த வனசுந்தர விஜயதிலக்க, 1980 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வழக்கறிஞராக சட்ட மாஅதிபர்கள் திணைக்களத்தில் இணைந்தார்.

சட்ட மாஅதிபர்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாகவும், பிரதி சொலிஸிட்டர் நாயகமாகவும்,
மேலதிக சொலிஸிட்டர் நாயகமாகவும் அவர் சேவையாற்றினார்.

வனசுந்தர விஜயதிலக்க கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்