கல்முனையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

கல்முனையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

கல்முனையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 3:33 pm

கல்முனை பாண்டிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைதானவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்முனை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாண்டிருப்பு பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தப்பிச்செல்வதற்கு முயற்சித்தபோது, வீதியில் விழுந்து காயமடைந்ததுடன், சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்