கல்பிட்டி விமானப்படை முகாமில் விபத்து; மூவர் காயம்

கல்பிட்டி விமானப்படை முகாமில் விபத்து; மூவர் காயம்

கல்பிட்டி விமானப்படை முகாமில் விபத்து; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 6:38 pm

கல்பிட்டி, கந்தக்குளி விமானப்படை முகாமில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் காயமடைந்துள்ளனர்.

எரி காயங்களுக்குள்ளான மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர், விங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக விசேட குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

பலாவி தலகஸ் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஐஸ்கிறிம் லொறியும் மற்றுமொறு லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்