கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலி

கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலி

கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 12:49 pm

கனடா பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியுடன் கட்டடத் தொகுதிக்குள் நுழைந்த அடையாளந்தெரியாத ஒருவர் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த பாதுகாப்பு படைவீரர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் தாக்குதலில் துப்பாக்கிதாரியும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன் ஐ.எஸ் ஆயுதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்தே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் ஆயுததாரிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்குவதாக கனடா கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்