ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனர்த்த ஒத்திகை

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனர்த்த ஒத்திகை

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனர்த்த ஒத்திகை

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 8:56 am

அனர்த்தம் தொடர்பான ஒத்திகை நடவடிக்கையொன்று இன்று காலை 10 மணிமுதல் 3 மணிவரை நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனர்த்தங்களின் போது, செயற்படும் விதம் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதே இந்த ஒத்திகையின் நோக்கமென இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் பிற்பகல் வேளையிலும், ஏனைய பகுதிகளில் காலையிலும் அனர்த்த ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இதற்கு முப்படையினரும், பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

எனவே, அனர்த்த ஒத்திகை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பிரதீப் கொடிப்பிலி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்