மேல் மாகாணத்தில் 430 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் 430 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் 430 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 10:22 am

மேல் மாகாண ஆசிரியர் சேவையில் மேலும் 430 பட்டதாரிகள் இன்று இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கணிதம், தகவல் தொழில்நுட்பம், மேற்கத்தேய சங்கீதம் மற்றும் சித்திரம் ஆகிய பாட விதானங்களை  போதிப்பதற்காக ஆசிரியர்கள்  இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர் மேல் மாகாணத்தில் வெற்றிடங்கள் நிலவுகின்ற பாடசாலைகளில் இந்த ஆசிரியர்கள்  நியமிக்கப்படவுள்ளதாக மாகாண முதலமைச்சர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்