மகாவலி நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

மகாவலி நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

மகாவலி நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 1:36 pm

அதிக மழை பெய்துவருவதை அடுத்து மகாவலி நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றது.

கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 80 வீதமாகவும், விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 72 வீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் காமினி ராஜகருணா குறிப்பிடுகின்றார்.

காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 79 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 81 வீதமாகவும் உயர்வடைந்துள்ளதுடன், கலா வாவியின் நீர் மட்டம் 67 வீதமாகவும் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், ரந்தெனிகல, ரந்தம்பே போவதென்ன, சமனல வாவி மற்றும் உடவளவ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 வீதத்தை இன்னும் எட்டவில்லை என்றும் மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

பெரும்போக பயிற்செய்கைக்கு தேவையான நீர் தமது நீர்த் தேக்கங்களில் காணப்படுவதாகவும் அவர்  சுட்டிக்காட்டுகின்றார்.

அதன் பிரகாரம் எவ்வித தடையுமின்றி பயிற்செய்கைக்கான நீரை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமது திணைக்களத்தின் கீழுள்ள 72 நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் 20 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்கள நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகீ மீகஸ்தென்ன குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்