பருத்தித்துறையில் வாகன விபத்து; இளைஞன் உயிரிழப்பு

பருத்தித்துறையில் வாகன விபத்து; இளைஞன் உயிரிழப்பு

பருத்தித்துறையில் வாகன விபத்து; இளைஞன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 11:58 am

யாழ். பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை டிப்போவுக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ். புலோலி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்