நீர்கொழும்பில் பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்; 9 பேர் காயம்

நீர்கொழும்பில் பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்; 9 பேர் காயம்

நீர்கொழும்பில் பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்; 9 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 6:43 pm

நீர்கொழும்பு, கடற்கரை வீதியிலுள்ள மதஸ்தலமொன்றில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகள் சிலர் மீது இன்று பிற்பகல் அடையாளம் தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த 9 பாகிஸ்தான் அகதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றார்.

தாக்குதலை நடத்தியவர்களால் மத ஸ்தலத்திற்கு சொந்தமான பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் அகதியொருவர் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தபோது, மற்றுமொருவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்