நாவற்குடா கொள்ளைச் சம்பவம்; சந்தேகநபர் கைது

நாவற்குடா கொள்ளைச் சம்பவம்; சந்தேகநபர் கைது

நாவற்குடா கொள்ளைச் சம்பவம்; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 2:09 pm

மட்டக்களப்பு, நாவற்குடா பகுதி வீடொன்றில் தங்காபரணங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் இருபது இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்காபரணங்கள், ரொக்கம் மற்றும் மின் உபகரணங்கள் போன்ற பொருட்களையும் சந்தேகநபரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் மட்டக்களப்பு பூம்புகார் பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.என். றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரே சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்