நாட்டில் சீரற்ற வானிலை தொடரும்; மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் சீரற்ற வானிலை தொடரும்; மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் சீரற்ற வானிலை தொடரும்; மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 9:51 am

நான்கு மாவட்டங்களில் விடுவிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வுப் நிலையத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

இந்த மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சி கிட்டியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்