சிரியாவில் அமெரிக்காவின் ஆயுத நிவாரணம் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வசம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆயுத நிவாரணம் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வசம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆயுத நிவாரணம் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வசம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 11:19 am

சிரியாவின் கொபானே நகரில் அமெரிக்கா  வான் மூலம் குர்திஷ் படைகளுக்கு விநியோகித்த ஆயுதங்கள் ஒருபகுதியை ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த விடயம் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா விநியோகித்த  சிறிய ரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஏனைய ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர் ஒருவர் தோன்றும் காட்சி குறித்த காணொளியில்  காணப்படுகின்றது.

இந்த காணொளி அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமது ஆயுத விநியோகம் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றமை குறித்து ஆராயவுள்ளதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவினால் விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களில் சிறு தொகையே கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்