சமூகங்கள் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது- ஜனாதிபதி

சமூகங்கள் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது- ஜனாதிபதி

சமூகங்கள் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது- ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 9:26 am

சமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும், சுபீட்சம் மற்றும் ஐக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு சந்தர்ப்பமாக தீபாவளி தினம் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போதான சமய நடைமுறைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நாட்டில் நிலவுகின்ற நல்லிணக்க உணர்வுக்கு இந்து சமூகத்தின் ஆர்வமும், செயல்திறனும் வாய்ந்த பங்களிப்பிற்கு மேலும் பெறுமதி சேர்ப்பதாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த தீபத்திருநாள் இந்து சமயப் போதனைகளை பின்பற்றும் அனைத்து மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், புரிந்துணர்வையும் தோற்றுவிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தமது தீபாவளி செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்து மக்களின் வாழ்க்கையை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்காக பல்வேறு பாரிய வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவிக்கின்றார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இந்துக்கள் மீண்டும் தாம் வாழ்ந்த இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியமையும், அந்த பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதையும் இந்த தருணத்தில் குறிப்பிட விரும்புவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌதீக ரீதியான முன்னேற்றம் மாத்திரமன்றி, இனங்களுக்கு இடையிலான நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய ஆன்மீக ரீதியிலான அபிவிருத்தியும், அதனை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அயராது உழைத்து வருவதாகவும் பிரதமரின் தீபாவளி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்