கிளிநொச்சியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கிளிநொச்சியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கிளிநொச்சியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 5:45 pm

கிளிநொச்சி நகரில் இன்று காலை இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களே விபத்துக்குள்ளானதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பரந்தனிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஜீப் வண்டியும், பிரதான வீதியால் பயணிக்க முற்பட்ட மற்றுமொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து ஏ_9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்