ஒன்றரை வருடமாக காணாமற் போயிருந்த பிள்ளை பிச்சைக்காரரிடம் இருந்து மீட்பு

ஒன்றரை வருடமாக காணாமற் போயிருந்த பிள்ளை பிச்சைக்காரரிடம் இருந்து மீட்பு

ஒன்றரை வருடமாக காணாமற் போயிருந்த பிள்ளை பிச்சைக்காரரிடம் இருந்து மீட்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 1:50 pm

சுமார் ஒன்றரை வருட காலமாக காணாமற் போயிருந்த பிள்ளையொன்று பிச்சைக்காரர் ஒருவரிடமிருந்து தம்புள்ளையில் மீட்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இந்த பிள்ளை உறவினர்களால் தவறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் நான்கு வயதான பிள்ளை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தம்புளை பொலிஸாரின் பொறுப்பிலுள்ள பிள்ளையை அதன் பாட்டனார் மற்றும் பாட்டியினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்