ஜனாதிபதிக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2014 | 8:16 am

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு, ஜாதிக்க ஹெல உறுமய கொண்டுவந்துள்ள தீர்மானங்கள் தொடர்பில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி பிரதான செயலாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

இந்த தீர்மானங்கள் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதால், கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும், தமது தீர்மானங்கள் குறித்து  கலந்துரையாட தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்த தீர்மானங்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜாதிக்க ஹெல உறுமயவின் 11 ஆவது பொது சம்ளேனத்தில் வெளியிடப்பட்டன.

தமது தீர்மானங்களுக்கு ஜனாதிபதி இணங்காவிடின், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக இதன்போது உதய கம்மன்பில கூறியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்