16ஆவது அகவைப்பூர்த்தியை கொண்டாடிய சக்தி ரீ.வி

16ஆவது அகவைப்பூர்த்தியை கொண்டாடிய சக்தி ரீ.வி

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 9:39 pm

தமிழ்பேசும் மக்களின் சக்தியான சக்தி ரீ.வி இன்று தனது 16ஆவது பிறந்த தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடியது.

‘என்றும் முதன்மை என்றும் பதினாறு’ எனும் தொனிப்பொருளுடன் தனது உயிரிலும் இனிய நேயர்களை மகிழ்விக்கும் நோக்கில் சக்தி ரீ.வி பல்வேறு நிகழ்ச்சிகளையும் இன்று காலை முதல் ஒளிபரப்பியது.

தமிழ்பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி ரீ.வி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நாட்டின் முதற்தர செய்திவழங்குநரான நியூஸ்பெஸ்ட்டும் பெருமிதமடைகின்றது.

சக்தி ரீவியின் 16ஆவது அகவைப்பூர்த்தியை முன்னிட்டு புதுப்பொலிவுடன் சக்தி ப்ரஸ் ரிலீஸ் மற்றும் குட்மோர்னிங் ஸ்ரீலங்கா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.

அதனைத் தொடர்ந்து பன்னிப்பிட்டிய பிரதான கலையகத்தில் சக்தி குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை நேயர்களுடன் பரிமாறிக்கொண்டனர்.

இசைத்துறையில் எம்மவரின் சாதனையை பறைசாற்றும் வகையில் ”இசை இளவரசர்கள்” முதல் ‘சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார்’ மற்றும் ‘சக்தி சுப்பர் ஸ்டார்’ ஆகிய நிகழ்ச்சிகளையும் சக்தி ரீ.வி பெருமையுடன் நடத்தி வெற்றிகண்டுள்ளது.

அத்துடன், சக்தி க்லசிகல் டான்சிங் ஸ்டார், வெல்லலாம் வாங்க, த டிபேட்டர், சக்தி கிரான்ட் மாஸ்டர், மகா இலட்சாதிபதி, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட மக்கள் மனம் கவர்ந்த பல்வேறு  நிகழ்ச்சிகளையும் ஒளிரப்பி நேயர்களின் அமோக ஆதரவை சக்தி ரீ.வி பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை தொலைகக்காட்சி வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் நோக்கில் சக்தி தொலைக்காட்சி உதயமானது.

இலங்கை தொலைக்காட்சி துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிய சக்தி ரீ.வி  இலங்கையின் முன்னிலை தமிழ் தொலைகாட்சி அலைவரிசையாக வீறு நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி ரீ.வி தடைக்கற்களை தகர்த்து வெற்றிநடைபோட நியூஸ்பெஸ்ட்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்