10 ஆயிரம் மெட்ரிக் தொன் தரமற்ற பெற்றோலை திருப்பியனுப்ப நடவடிக்கை

10 ஆயிரம் மெட்ரிக் தொன் தரமற்ற பெற்றோலை திருப்பியனுப்ப நடவடிக்கை

10 ஆயிரம் மெட்ரிக் தொன் தரமற்ற பெற்றோலை திருப்பியனுப்ப நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 7:47 pm

நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் தரமற்ற பெற்றோலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிராகரித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்தே தரமற்ற பெற்றோல் கொண்டுவரப்பட்டிருந்ததாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ் அமரசேகர நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதற்கமைய, நிராகரிக்கப்பட்ட பெற்றோலை மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தரமற்ற பெற்றோலுக்குப் பதிலாக, தரமான பெற்றோலை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்