வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்களம் மக்களால் முற்றுகை

வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்களம் மக்களால் முற்றுகை

வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்களம் மக்களால் முற்றுகை

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 11:16 am

மட்டக்களப்பு போரைதீவுபற்று வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்களத்தை விவேகானந்தபுரம் அம்மன்குளம் கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அலுவலகத்திலுள்ள உத்தியோகஸ்தர்களை வெளியேறவிடாமல் காலை ஆறு மணி தொடக்கம் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய முறையில் தமது பணியை முன்னெடுக்க தவறுவதாக கூறி  மக்கள், எதிர்பு தெரிவித்து வருகின்றனர்.

விவேகானந்தபுரம் அம்மன்குளத்தில் இன்று அதிகாலை யானை கிராமத்திற்குள் பிரவேசித்தமை குறித்து அதிகாரிகளுக்கு தெறியப்படுத்தியப் போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கிராமத்துக்குள் பிரவேசித்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

விவேகானந்தபுரம் அம்மன்குள கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி பீ.ஜெகதீஷ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

மக்களின் கோரிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயரதிகாரிகளுக்கு அறியப்படுத்தியதை அடுத்து வெல்லாவெளி கிராமத்திற்காக வனஜீவராசிகள் உத்தியோகஸ்தர்களை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்