ரஜினி மற்றும் மேனகா காந்திக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம்

ரஜினி மற்றும் மேனகா காந்திக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம்

ரஜினி மற்றும் மேனகா காந்திக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 7:58 pm

தனக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி கூறி, தமிழக முன்னாள் முதல்வரும், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஜெயராம் கடிதம் அனுப்பியுள்ளார்.

சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா ஜெயராமிற்கு நடிகர் ரஜினிகாந் நேற்று வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் முயற்சிகள் வெற்றியளிக்க பிரார்த்தனை செய்வதாக ஜெயலலிதா ஜெயராம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனக்கு நேற்று கடிதம் எழுதியிருந்த மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும் நன்றி தெரிவித்து, தமிழக முன்னாள் முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேனகா காந்தியின் கடிதம் தன்னை நெகிழ வைத்ததாக தெரிவிக்கும் ஜெயலலிதா ஜெயராம், பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியில் கடிதம் எழுதியமைக்காக நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா ஜெயராமிற்கு பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியமை இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ள விவகாரம் தமிழகத்தில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் தமது கட்சியின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் முரளீதர் ராவ் கூறியுள்ளார்.

இதேவேளை, நாகர்கோவிலில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத் குமார், வழக்குகளை உடைத்தெறிந்து ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்