மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 7:11 am

திருக்கோவில் விநாயகப்புரம் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, நேற்று மாலை மின்னல் தாக்கத்திற்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

விநாயகப்புரம் தாளக்குடா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்  திருக்கோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்