மகிழ்ச்சியில் தலைகீழாக குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கால்பந்து வீரர் (Video)

மகிழ்ச்சியில் தலைகீழாக குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கால்பந்து வீரர் (Video)

மகிழ்ச்சியில் தலைகீழாக குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கால்பந்து வீரர் (Video)

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 6:20 pm

இந்தியாவின், மிஸோரமைச் சேர்ந்த 23 வயது கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா (Peter Biaksangzuala) தான் போட்ட கோலைக் கொண்டாட முயன்றதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

மிஸோரம் பிரிமியர் லீக் போட்டியில் பெத்லஹெம் வெந்த்லாங் கால்பந்து கழகத்திற்காக விளையாடிய பீட்டர், தனது அணிக்காக கோல் ஒன்றை பெற்ற மகிழ்ச்சியில் தலைகீழாக குதித்தார், தலை நேராக தரையில் மோதியதால் அவரது முள்ளந்தண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்