‘புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்வோம்’; உபுல் ஜயசூரிய கருத்து

‘புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்வோம்’; உபுல் ஜயசூரிய கருத்து

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 8:52 pm

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினை நாடி மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய வலயத்திற்குள் விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு  தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய இது குறித்து விளக்கமளித்தார்.

[quote]இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்து வெளிவிவகார அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் ஆற்றில் மரக்குற்றியை விட்டதற்கு ஒப்பான செயலாகும். இன்று வெளிவிவகார சேவை செயலிழந்துள்ள நிலையில் யார் மீதும்  குறை கூறிக்கொண்டிருப்பதை விட, யார் தவறிழைத்தார்கள் என்பதனை ஆராய்வதை விட முக்கியமான வேலையொன்று உள்ளது. இதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்நிற்கவுள்ளது.  திறமையான சட்டத்தரணிகளின் சேவையைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களையும், ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களையும், பொலிஸ் வீடியோக் காட்சிகளையும் பெற்றுக் கொண்டு மீண்டுமொருமுறை ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளோம். இதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சேவையை இலவசமாக வழங்கி, மீண்டுமொருமுறை புலிகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு எம்மால் இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என இந்த சந்ர்ப்பத்தில் தெளிவாக கூறுகின்றோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்