பருத்தித்துறையிலிருந்து கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறையிலிருந்து கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறையிலிருந்து கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 8:02 am

பருத்தித்துறையிலிருந்து  கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது பஸ் சேவை இன்று அதிகாலை 5.15 க்கு ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி தெரிவிக்கின்றார்.

அதற்கமைய தினந்தோறும் அதிகாலை 5.15 க்கும் காலை 10.30 க்கும் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக் காரணமாக பருத்தித்துறையிலிருந்து முல்லைத்தீவுக்கான பஸ் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததாகவும் பருத்திதுறை சாலை முகாமையாளர் கூறினார்.

பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குடாநாட்டு மக்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவதை கருத்திற் கொண்டு நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் பருத்திதுறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி  சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முல்லைத்தீவு கொக்கிலாய் பஸ் நிலையத்திலிருந்து பருத்தித்துறைக்கான நேரடி பஸ் சேவை பிற்பகல் ஒரு மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்