தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 1:31 pm

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நானுஒயா வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது

இந்த ரயில் நாளை இரவு 7.30 க்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து மலையகம் செல்லும் பயணிகளின் நலன்கருதி இந்த ரயில் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதான ரயில் கட்டுப்பாட்டாளர் டி.வி.உப்புல் குறிப்பிட்டுள்ளார்..

இந்த ரயில் தீபாவளி தினத்தன்று காலை எட்டு மணிக்கு நானுஒயா ரயில் நிலையத்திலிருந்து கொழும்புக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்