தாய்நாட்டிற்கு எதிராக அபாய சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது; ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

தாய்நாட்டிற்கு எதிராக அபாய சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது; ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

தாய்நாட்டிற்கு எதிராக அபாய சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது; ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 7:10 pm

தாய்நாட்டிற்கு எதிராக மிகவும் பயங்கரமான அபாய சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியமை தொடர்பில் அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய பிரித்தானியாவின் இந்த செயற்பாட்டினை புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நீதிமன்றத் தீர்ப்பாக புலப்பட்டாலும், ஆழமாக கரிசனை செலுத்தும் போது, ஒரு தனிப்பட்ட விடயமாக இதனை கருத முடியாதென்பது தெளிவாவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெருமவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியும், மனித உரிமை வாசகங்களுக்குள் மறைந்து, வெளிநாட்டுப் பணத்தையே தமது இருப்பாகக் கொண்டு நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒருசில அரசசார்ப்பற்ற அமைப்புக்களும் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெவ்வேறாக இடம்பெறுகின்ற அனேகமான சம்பவங்கள் ஒரே செயற்பாட்டின் அங்கங்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு தவறும் வரை, நாம் அறியாமலேயே அவர்கள் தமது இலக்குகளை இலகுவாக அடைவார்கள் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எல்.ரி.ரி.ஈ தடை நீக்கப்பட்டமையுடன் தொடர்புபடுத்தி மேலும் பல நிகழ்வுகளையும் அந்தக் கட்சி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

செனல் போ கானொளி அமெரிக்காவின் விசேட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமையும் அந்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.

யாழ். தேவியின் வடக்குப் பயணம் மற்றும் ஜனாதிபதி கலந்துகொண்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பங்கேற்காமை எல்.ரி.ரி.ஈ தடை நீக்கப்பட்டமை தொடர்பில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் மௌனம் சாதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ந்துள்ளமை எந்த வகையிலும் தற்செயலாக இடம்பெற்றவை என கருத முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.

வழங்கப்பட்டுள்ள சமிக்ஞையை சரியாக புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பொறுப்புக்களையும் அடையாளம் காண வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் செயற்படுவதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்